பிகேஎப்செட் திட்டத்தின் செலவினங்கள் தொடர்பான ‘ரகசிய அமைச்சரவைப் பத்திரங்கள்’ என ஆர்பிகே கூறிக் கொள்ளும் அப்பத்திரங்களின் மின்னியல் படிவங்கள், நிதியமைச்சினால் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட ஓர் அறிக்கை போல் காணப்படுகிறது.
அந்த திட்டத்துக்கான செலவினங்களில், பின்தேதியிடப்பட்ட அதிகரிப்புக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அது கோரியுள்ளது. அந்த அதிகரிப்பு ஒரு பில்லியன் ரிங்கிட்டிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் ரிங்கிட் வரையிலாகும்.
மேலும் அத்திட்டத்துக்கான புதிய செலவினமாக, அதே தொகையில் எளிய நிபந்தனையிலான கடன், அந்த மேம்பாட்டாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் அந்த பத்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அந்த கடன் தொகைக்கான கருவூல கடன் பத்திரத்தை (BOND) அரசாங்கம், குவாலா டைமென்சி செண்டிரியான் பெர்ஹாட்டிடம் வழங்குமென அந்த பத்திரம் குறிப்பிட்டது.
மேலும் நில கொள்முதலுக்கான அனைத்து விவரங்களையும் அரசாங்கம் அங்கீகரித்ததாயும் அது தெரிவித்தது. ஆயினும் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட ‘ஒப்புதல் கடிதம்’, அத்திட்டத்துக்கு நிதி வழங்குவதற்கான அரசாங்கத்தின் கருவூல கடன் பத்திரம் ஆகிய இரண்டும் தவறானவை என்றும், காரணம், அந்த நடைமுறைகள் நிதியமைச்சின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.
அதோடு பிரதமர் துறையில் உள்ள பொருளாதார திட்டமிடல் பிரிவும் அந்த விவகாரத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
பிகேஎப்செட் விவகாரம் குறித்த புலனாய்வை மேற்கொள்வதற்கு, அரசாங்கத் தலைமைச் செயலாளர் சிடேக் ஹசான் தலைமையில், சக்திவாய்ந்த பணிக்குழுவொன்று அமைக்கப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருந்தார்.
அந்த விவகாரம் தொடர்பான நடப்பு அறிக்கைகள் அனைத்தும் ‘முற்றுப் பெறாதிருப்பதால்’ பணிக்குழு தேவைப்படுகிறது என பிரதமர் கூறினார். எனவே, விவகாரத்தை தீர விசாரிப்பதற்கு அமைச்சரவை பணிக்குழுவை நியமித்துள்ளது என்றார் அவர்.
‘ரகசிய’ அமைச்சரவை பத்திரங்கள் குறித்த ஆர்பிகேயின் தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அந்த புகைச்சல் குறித்து தெரிய வேண்டிய அனைத்தையும் அமைச்சரவை ஏற்கனவே அறிந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
Maknanya...... aku pun tak tahu....carilah sendiri...